December 05, 2013

#Vijay finished his dubbing for #jilla


தலைவாவுக்கு பிறகு விஜய் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் மதுரை வட்டார இளைஞனாக நடித்திருக்கிறார் விஜய். அதோடு அவரது வழக்கமான காதல், மோதல், காமெடி, செண்டிமென்ட் என அனைத்து கமர்சியல் அயிட்டங்களும் கலந்த கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே அஜீத்தின் வீரத்திற்கும், விஜய்யின் ஜில்லாவிற்கும் தமிழகத்திலுள்ள பிரமாண்ட தியேட்டர்கள் அனைத்தும் பங்கு போடப்பட்டு விட்டதால், இரண்டு படக்குழுவுமே இறுதி கட்ட வேலைகளில் தடபுடலாக முடிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டன. இதற்கிடையே கோச்சடையான் பின் வாங்கி விட்டதால் விஜய்-அஜீத் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில்தான் ஜில்லா படப்பிடிப்பு முடிந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தனக்கான டப்பிங் பேசும் பணியில் ஈடுபட்டுள்ளார் விஜய். சாதாரணமாக தனது படங்களில் அதிகபட்சம் இரண்டு நாட்களில் டப்பிங் பேசி விடும் விஜய், நேற்றுடன் டப்பிங் பேசி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மற்ற நடிகர்-நடிகைகளுக்கான டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு வேலைகளும் துரிதமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஆக 7 ஆண்டுகளுக்கு முந்தைய பொங்கலுக்கு போக்கிரி மூலம் விஜய்யும், ஆழ்வார் மூலம் அஜீத்தும் மோதிக்கொண்டவர்கள் இப்போது மறுபடியும் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment