ஒரு படம் முடிந்ததும் குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு பறந்து விடுவதை பல வருஷங்களாக பின் பற்றி வருகிறார்கள் அஜீத்தும் விஜய்யும். ஆனால் தலைவாவுக்கு பிறகு இந்த முறைதான் வெளிநாட்டுக்கு செல்லாமலேயே தனது அடுத்த படமான ஜில்லாவை ஆரம்பித்திருந்தார் விஜய். பில்லா-2 க்கு பிறகு ஆரம்பம் படத்தை உடனே தொடங்கிவிட்டார் அஜீத். அது முடிவதற்கு முன்பே வீரமும் தொடங்கப்பட்டது. இந்த தொடர் படப்பிடிப்புகளின் காரணமாக இவரும் வெளிநாட்டுக்கு பறந்திருக்கவில்லை. இந்த முறை அப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று நினைத்திருக்கலாம்.
டிசம்பர் 20 ந் தேதி குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புகிறார் அஜீத். அவரது முழங்காலில் செய்ய வேண்டிய ஆபரேஷனை திரும்பி வந்தபின் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம் மருத்துவர். இதற்கிடையில் மனசை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்வதற்காக விஷால் இமயமலைக்கு போய் திரும்பிவிட்டார். சிம்பு, தனுஷ், அனிருத் மூவரும் லண்டனுக்கு பறந்திருக்கிறார்கள். இவர்களை போல பாக்கெட்டில் தில் இல்லாத நடிகர்கள் பலர் தயாரிப்பாளர் செலவில் ஷுட்டிங்கையாவது வெளிநாட்டில் வைக்க மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment